Vijay

Vijay

Saturday, January 29, 2011

வைர வரிகள்..

மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு இடுகை, அதுவும் தமிழில்.
இந்த இடுகை என் கல்லூரி காலத்தில் என் துறை தலைவர் (H. O. D) எங்களுக்கு வழங்கிய அறிவுரை.

இரு வரிகளில் முடிந்து விடும் ஒரு ஜென் கதையைப் போல மிகவும் ஆழமான ஒரு அறிவுரை.

இதற்கு மேல் முன்னுரை தேவை இல்லை, நேராக சம்பவத்திற்குள், , ,

நாங்கள் என்றால், எங்கள் வகுப்பைச் சேர்ந்த 4 பேர்.

நான், சதீஷ், கிரி மற்றும் ஸ்ரீதர்.

தேர்வு முடிந்த சில நாட்கள் நாங்கள் எப்போதும் தாமதமாகவே வீட்டிற்கு செல்வோம். பெரிதாக எந்த காரணமும் இல்லை. மறு தேர்வு (Re-Test) எழுதுவதர்க்காக.
அது Prob & Stat தேர்வு. மேற்பார்வை இடுவது எங்கள் கண்ணன் சார். அவர் என்பதால் மட்டும் அல்ல, Maths HOD மேல் உள்ள பயத்தால் நான்

எப்படியோ தேர்ச்சி அடைந்து விட்டேன், ஆனால் கிரி மட்டும் மாட்டிக் கொண்டு விட்டான்.

அவன் உள்ளே.. தேர்வு எழுதிக் கொண்டு..
நாங்கள் வெளியே.. அவனுக்காக காத்திருந்தோம். .

நிறையவே படித்திருப்பான் போலும், கொண்டு சென்ற விடைதாட்கள் போதவில்லை என்று மேலும் சில தாட்கள் வேண்டும் என்று அவன் கேட்க,

சதீஷ் கொண்டு சென்று கொடுத்தான்.

(கவனிக்க: சதீஷ் கண்ணாடி அணிவது வழக்கம். andha சமயத்தில் அணியவில்லை என்று நினைக்கிறேன்)

தவறுதலாக, வெற்று தாட்களை கொடுப்பதற்கு பதில், வேறு ஒரு மாணவியின் (class first வந்த சசியின்) விடைத் தாட்கள் உள்ளே இருந்ததை அவன்
கவனிக்கவில்லை, கொடுத்து விட்டான்.
அதை கிரி கூட கவனிக்கவில்லை. கண்ணன் சார் கவனித்து விட்டார்.

நேராக எங்கள் கார்த்திகேயன் சாரிடம் அழைத்துச் சென்றார்.

கார்த்திகேயன் சார் : உங்கள எத்தன தடவ தாண்டா திட்றது?

என்னால முடியாது,

கண்ணா, இவங்கள உங்க HOD கிட்ட கூட்டிட்டு போ.

கண்ணன் சார்: Come to my cabin on monday, I will take you to my HOD. Let him decide.

மாட்டிக்கொண்டது அவர்கள் இருவர் தான் என்றாலும், எங்கள்ளுக்கும் வயிற்றில் அமிலம் சுரந்தது..

சற்று அதிகமாகவே..

உடனே, நாங்கள் எங்கள் கார்த்தி சார் பின்னாடியே சென்றோம்.

சதீஷ்: சார், நான் கவனிக்கவே இல்ல சார். தெரியாம எடுத்து கொடுத்துட்டேன்.

கிரி: சார், நான் அத பாக்க கூட இல்ல சார், அதுக்குள்ள கண்ணன் சார் புடிச்சிட்டாரு.

4 பெரும் சேர்ந்து: சார், சார், இந்த ஒரு தடவ சார்..

கார்த்திகேயன் சார் : டேய், இப்போ நான் வீட்டுக்கு போகணும், கிளம்புங்க.

Monday பாக்கலாம்.

விடுவோமா நாங்கள்? தொடர்ந்து சென்றோம். வழியில் வந்த பெண்களைக் கூட பார்க்கவில்லை.!!

கடைசியாக அவர் நின்றார்.

கார்த்திகேயன் சார் : என்னடா வேணும், விஜய், ஸ்ரீ நீங்க ஏன்டா வரீங்க, போங்கடா. சதீஷ், உனக்கு என்ன வேணும்.

சதீஷ்: சார், Maths HOD, Monday.

கார்த்திகேயன் சார்: அதுக்கு இப்போ என்ன?

சதீஷ்: இல்ல சார், தெரியாம, நான் கவனிக்கவே இல்ல.

கார்த்திகேயன் சார்: டேய்,,,, சரி போங்கடா.

சதீஷ்: சார் அப்போ திங்கட்கிழமை??

கார்த்திகேயன் சார் : சுட்டா கொன்னுட போறாங்க?

அதற்கு மேல் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாங்களும் எதுவும் கேட்கவில்லை.

நானும் இத்துடன் இந்த இடுகையை நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment